வெளிப்படுத்தின விசேஷம் படி இயேசு கடவுள் அல்ல

 வெளிப்படுத்தின விஷேசம் படி இயேசு கடவுள் அல்ல

இது யோவான் என்பவர் தான் கண்ட கனவை எழுதியதாக கருதப்படுகிறது


1.இதன் முதலாவது வசனமே இயேசு வேறு தேவன் வேறு என்று தெளிவாக கூறுகிறது.


அதாவது தேவன் இயேசுவுக்கு ஒப்புவித்ததை , இயேசு தூதனை அனுப்பி யோவானுக்கு வெளிப்படுத்தியதாம் இது… தேவன் சொல்லி கொடுத்தால் தான் யேசுவுக்கு தெரியவரும் போல.


¹ “சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.”(வெளி 1:1)


2.இயேசு வேறு தேவன் வேறு.. அதாவது இயேசுவுடைய பிதா தான் தேவனாம்.


⁶ “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.” (வெளி 1:6)


3.இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவரும் இயேசு அல்ல

“"இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்."”

  — Revelation 1:8 (TBSI)


Note: “இதில் இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய” என வருவது இயேசுவை குறித்து அல்ல. ஏனெனில் கிரேக்க பிரதிகளில் தியோஸ் (தேவன்) என உள்ளது..





தேவன் என்பது மொழிபெயர்ப்பில் விடப்பட்டுள்ளது. ஆனால் வெளி 4:8,16:5-7 இல் விடப்படவில்லை. தேவனே இருக்கிறவர் இருந்தவர் வருகிறவர். இயேசு அல்ல


————–


3.இயேசு தன்னை அல்ஃபா, ஒமேகா , முந்தினவர் பிந்தினவர் என சொன்னாராம்.



¹¹ “அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.” (வெளி 1:11)

இதே புத்தகத்தில் இயேசுவே தேவனது முதல் படைப்பு என்று கூறப்பட்டுள்ளது


“"லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;"”

  — Revelation 3:14 (TBSI)


இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் தெளிவாக இருக்கும்:

“And unto the angel of the church of the Laodiceans write; These things saith the Amen, the faithful and true witness, the beginning of the creation of God“And unto the angel of the church of the Laodiceans write; These things saith the Amen, the faithful and true witness, the beginning of the creation of God;”

  — Revelation 3:14 (KJV)

அதாவது இயேசு தேவனது முதல் படைப்பாக இருப்பதால், முந்தினவர் என்றும்

மேலும் கடைசி காலத்திலும் இயேசு வருகிறதாக சொல்லப்படுவதால், அவரை பிந்தினவர் என்றும் சொல்லப்படுகிறது.


இதில் தெய்வீகம் இல்லை.


இயேசு வேறு தேவன் வேறு னு இதே புத்தகம் கூறும்போது, இது இயேசுவை தேவனாக சித்தரிப்பதாக கூறுவது அபத்தமாகும்.


மேலதிகமாக

 யேசு என்பவர் வார்த்தை மனிதனாக வந்தவர் என்கிறது புதிய ஏற்பாடு.(யோவான் 1:14).

 வார்த்தை என்பது , தேவனது பேச்சிலிருந்து உள்ளது ஆகும்.. அது நபர் கிடையாது.. அது ஏற்கனவே தேவனது பையனாக அவரது மடியில் இருந்தது என்பதாக நினைத்துக்கொண்டனர்..(யோவான் 1:18). காரணம் யேசு குழந்தையாக தாயின் வயிற்றிலிருந்து வந்ததால், பிறக்க முன்பும் குழந்தையாக இருந்ததாக கருதினர்.


தேவன் தான் கட்டளையிட்டதன் மூலம் சகலதும் உண்டானதாக (ஆதி 1:3,5,7..) பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளதால், இது இயேசு தான் என புரிந்த இவர்கள், இயேசு மூலமாக தேவன் சகலத்தையும் படைத்தார் எழுதியுமுள்ளார்கள். (உதாரணமாக யோவான் 1:2-3, கொலோசெயர் 1:16-17)

----------


5.இயேசு மீண்டும் தன்னை முந்தினவர் பிந்தினவர் என சொன்னாராம். அவர் மரணித்தாராம். பிறகு எப்போதும் உயிருடன் இருக்கிறாராம்.


¹⁷ “நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;”

¹⁸ “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன் (வெளி 1:17-18) also 2:8


முந்தினவர் பிந்தினவர் குறித்து குறிப்பு 4ஐ பார்க்கவும்.


இயேசு மரணித்ததாக கூறுகிறார்.. மரணித்தவர் இறைவனில்லையே..


மரணித்த பின் சகலரும் உயிரோடு. தான் இருப்பதாக தான் கூறப்படுகிறது.


ஏனெனில் தேவன் தன்னை குறித்து முட்செடி கதையில் மோசேயிடம் தன்னை இறந்தோரின் தேவன் அல்ல.. உயிருள்ளோரின் தேவன் என்பதை நான் ஆப்ரகாம் ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் தேவன் என சொன்னாராம் என இயேசு சொன்னாராம்.(மாற்கு 12:26-27, லூக்கா 20:37-38)


அதேபோல ஆப்ரகாம் சொர்க்கத்தில் உயர் அந்தஸ்த்தில் இயேசு காலத்திலேயே இருந்துள்ளார். (லூக்கா 16:23-31)


சோ மரணித்த பின் உயிரோடு இருப்பதால் ஆச்சரியம் இல்லையே..


எலியா , ஏனோக் மரணிக்காமல் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக கூறுகிறது.. அதேபோல் மெல்கிசேதேக் என்ற ஆசாரியனும் முடிவில்லாதவனாக எபிரேயர் (தப்பாக) புத்தகம் கூறுகிறது.

------


6.தேவன் வேறு இயேசு வேறு. இயேசு தன்னை தேவனுடைய பையன் என்றாராம்.

.


¹⁸ “தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;” (வெளி 2:18)

இவர்களது நம்பிக்கை தேவன் வேறு இயேசு வேறு என்பதே.

இயேசு எப்படி தேவகுமாரன் ஆனார் என்று இயேசு சொல்லும்போது,

 தேவனால் பரிசுத்தம்பண்ணப்பட்டதாலும், அவரால் அனுப்பப்பட்டதாலுமே என்று யோவான் 10:36 என்கிறார்.

இதேபோல் சொலமோனை குறித்தும் அவனுக்கு நான் பிதாவாக இருப்பேன். அவன் எனக்கு குமாரனாக இருப்பான் என்று 2 சாமுவேல் 7:14 இல் கூறப்படுகிறது.

தேவனது குமாரன் என்றாலே தேவன் என்பவர் வேறு நபர் என்றாகிவிடும்.

-------


7.இயேசு பிதாவிடம் அதிகாரம் பெற்றவரே என்று இயேசு சொன்னார்னு எழுதுகிறார்.. அதாவது இவர் கடவுள்னா கடவுளுக்கு சமம்னா ஏன் பிதா கொடுத்து இவர் பெற வேண்டும்?


²⁶ “ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.”(வெளி 2:26)

-----------


8.தேவன் என்பவர் இயேசுவுக்கும் தேவனாயிருக்கிறார்…சோ இயேசு வேறு தேவன் வேறு;”


¹² “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.”(வெளி 3:12)


இதில் மட்டும் தேவனை “என் தேவன்” என இயேசு சொன்னதாக நான்கு தடவைகள் வந்துள்ளன.

------------


9.இயேசு என்பவர் தேவனது படைப்பின் ஆரம்பம்

“"லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;"”


  — வெளி 3:14 (TBSI)




இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் தெளிவாக இருக்கும்:


“And unto the angel of the church of the Laodiceans write; These things saith the Amen, the faithful and true witness, the beginning of the creation of God“And unto the angel of the church of the Laodiceans write; These things saith the Amen, the faithful and true witness, the beginning of the creation of God;

  — Revelation 3:14 (KJV)

அதாவது தேவன் முதலாவதாக இவரை படைத்ததாக இது சித்தரிக்கிறது.

-------


10.தேவன் வேறு இயேசு வேறு.. தேவன் தான் சகலத்தையும் படைத்ததாகவே இப்புத்தகம் கூறுகிறது


.

⁸ “அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.”


¹⁰ “இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:”

¹¹ “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள். ” (வெளி 4:8,10-11)

இயேசுவும் இதில் அடங்கும் (வெளி 3:14)

---------


11.தேவன் வேறு.. ஆட்டுக்குட்டியாகிய இயேசு வேறு என்பதே இது கூறுவது


“”பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை. மறைத்துக்கொள்ளுங்கள்;””

— வெளி 6:16


ஆட்டுக்குட்டி வேறு தேவன் வேறு.


⁵ “அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.”

⁶ “அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.”

⁷ “அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்து புஸ்தகத்தை வாங்கினார்.”

⁸ “அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:”

⁹ “தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,”

¹⁰ எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.


¹² அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.

¹³ “அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன். (வெளி 5::5-10,12-13)


தேவன் வேறு இயேசு வேறு னு 5:9,10 இல் தெளிவாகவும், 5:7,13 இல் தேவனாகியவர் சிங்காசனத்தில் இருப்பதாகவும், இவரோ ஆட்டுக்குட்டியாக இருப்பதாகவும் சித்தரிக்கிறது.

--------

12.மீண்டும் தேவன் வேறு ஆட்டுக்குட்டி வேறு என இப்புத்தகம் சித்தரிக்கிறது.


¹⁰ அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.


¹¹ “தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:”

¹² “ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.”


¹⁷ “சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான். ” (வெளி 7:10-12,17)

அதாவது ஆட்டுக்குட்டி மற்ற ஆடுகளை மேய்ப்பவர்.

சோ இயேசு வேறு தேவன் வேறு


------

13.தேவன் வேறு அவருடைய கிறிஸ்து வேறு

.


¹⁰ “அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்.” (வெளி 12:10)


14.மீண்டும் தேவன் வேறு இயேசு வேறு என்கிறது


⁴ ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.(வெளி 14:4)

----


15.தேவன் ஒருவரே பரிசுத்தர்.. அதாவது அவர் ஒருவர்.. ஆட்டுக்குட்டி வேறு தேவன் வேறு..


³ “அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.”


⁴ “கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.” (வெளி 15:3-4)

----------


16.ஆட்டுக்குட்டி கர்த்தாதி கர்த்தரால். ராஜாதி ராஜாவாம்


இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.”

— வெளி 17:14


இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36


ராஜாதி ராஜா என்பது ஏனைய மனித ராஜாக்களுக்கும் பைபிளில் பயன்படுத்த பட்டுள்ளது… உதாரணமாக தேவனே தன் வாயால் நெபுகாத்நசரை ராஜாதிராஜா என்கிறார் - எசேக்கியேல் 26:7


இதனால் தேவனாவதில்லை.


----------


17.தேவன் என்பவர் அவருடைய சிங்காசனத்தில் இருப்பவர்


¹ “இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நீயாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.”


⁴ “இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.”


⁵ “மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.”


⁶ “அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.” (வெளி 19:1,4-6)


இங்கு தேவன் என்பவர் ஒரு நபராகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்…

-----------


18.தேவனையே தொழுது கொள்ளுமாறு தேவதூதன் கூறியதாக கூறப்பட்டுள்ளது. இயேசுவுக்கு இங்கு எங்குமே தேவன் என்ற பட்டம் வழங்கப்படவில்லை!


¹⁰ அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.(வெளி 19:10)


---------


19.இயேசுவின் பெயர் தேவனுடைய வார்த்தையாம்…. இந்த பெயரால் தான் கிறிஸ்தவர்கள் மனோ இச்சையால் வழிகெட்டனர்.


¹³ இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.

¹⁶ “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.” (வெளி 19:13,16)

மேலும் குறிப்பு 16ஐ பார்க்க.

இயேசு வார்த்தை மூலம் உண்டானதால் இப்பெயர் வந்தது. இவர்களோ அவரையே தேவனது பேச்சாக மாற்றி தனி நபராக இருந்ததாக எழுதியுள்ளனர் (பார்க்க யோவான் 1:1)

இப்புத்தகமோ இயேசுவுக்கு தேவன் இருப்பதாகவும் (3:12), இயேசுவே முதல் படைப்பு (3:14) என்றும் கூறி இவர் கடவுளல்ல என்கிறது.

------


20.வேறு சிலருக்கும் நியாயத்தீர்ப்பு வழங்க அதிகாரம் கொடுக்கப்பட்டதாம். அவர்கள் இயேசுவோடு 1000 வருடம் அரசாண்டார்களாம்.


⁴ “அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.”(வெளி 20:4)


இவ்வாறே இயேசுவும் அதிகாரம் கொடுக்கப்பட்ட நபராக பவுலின் கடிதங்கள் கூட கூறுகின்றன


.----


21.மீண்டும் தேவன் வேறு கிறிஸ்து வேறு என சித்தரிக்கிறது இப்புத்தகம்

அதாவது கிறிஸத்து வேறு தேவன் வேறு

⁶ “முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.”(வெளி 20:6)


22.தேவன் தான் தான் மக்களுக்கு தேவனாக இருப்பார்.. இயேசுவல்ல… மக்கள் தேவனது பிள்ளையாக இருப்பார்களாம்.


² “யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.”


³ “மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.”


⁴ “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”


⁵ “சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாத்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.”


⁶ “அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.”


⁷ “ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.” (வெளி 21:2-7)


அதாவது ஜெயங்கொள்ளுகிறவன் தேவனுக்கு வாரிசாகி தேவனுடைதை எடுத்துக்கொள்வானாம்.. காரணம் அவன் தேவனது பையனாக இருப்பானாம்.. ஆனாலும் அவர் அவனுக்கு தேவனாக தான் இருப்பாராம். (21:7)

இயேசுவுக்கும் அவரே தேவன் (வெளி 3:12)


.

23.சர்வ வல்லமை உள்ள கர்த்தராகிய தேவன் வேறு இயேசு வேறு என மீண்டும் வேறுபடுத்தி கூறுகிறார்


²² அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்

²³ “நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.” (வெளி 21:22-23)


24.மீண்டும் யேசு வேறு தேவன் வேறு என பிரித்து கூறுகிறார்


¹ “பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.”


³ இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.

⁴ “அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.”

⁵ அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள். (வெளி 22:1,3-5)


25 .மீண்டும் யோவான் தேவதூதனை வணங்க முற்படுகிறான்.. மீண்டும் ஏவதூதன் தேவனை வணங்குமாறே கூறுகிறார்.. ஆட்டுக்குட்டியையும் சேர்த்து வணங்கு என கூறவில்லை.


⁸ “யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.”


⁹ “அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.” (வெளி 22:8-9)


26.மீண்டும் யேசு தன்னை குறித்து சொன்னதாக வருவதில் கூட, தன்னை கடவுளாக அறிமுகப்படுத்தியவில்லை!! தன்னை தாவீதின் வேறும் சந்ததியும் என்றே கூறுகிறார்.


முந்தினவர் பிந்தினவர் கதைக்கு ஆரம்பத்திலேயே விளக்கம் கூறிவிட்டேன்

.

இயேசு அவனவனுடைய கிரியைகளுக்கு தக்க பலனளிப்பாராம். இயேசுவை அதிகாரம் பெற்ற நபராக இது சித்தரிக்கிறது அவ்வளவே.


¹² “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.”

¹³ “நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.”

¹⁴ “ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.”


¹⁶ “சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.”


²⁰ “இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.”

(வெளி 22:12-14,16,20)


தேவனானவர் இயேசுவுக்கும் தேவன் தான் -வெளி 3:12


சோ இயேசு தான் தேவன் என அடம்பிடிப்பதை நிறுத்தவும்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்