ரோமர் படி இயேசு கடவுள் அல்ல
ரோமர் அடிப்படையில் இயேசு கடவுள் அல்ல
------------------------------------------------------------------------
ரோமர் புத்தகம் புதிய ஏற்பாட்டின் 6வது புத்தகம். இதை பவுல் எழுதியதாக நம்பப்படுகிறது (கடைசி அதிகாரத்தை வேறு யாரோ எழுதியிருப்பார் 😜).
இப்புத்தகம் இயேசுவை தேவனல்ல..
இயேசுவின் பிதா தான் தேவன் என்றே கூறுகிறது.
1.பிதா தான் தேவன். சோ இயேசு வேறு.. தேவன் வேறு
³ நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (ரோமர் 1:3)
-------------
2.இயேசு என்பவர் தேவனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர். சோ தேவன் வேறு இயேசு வேறு.
⁴ "இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,"
⁵ "மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்." (ரோமர் 1:4-5)
----------
3.இயேசு வேறு தேவன் வேறு.. இயேசு மூலமாக தேவனை ஸ்த்தோத்திரிகீகிறாராம் பவுல்
⁸ "உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்."(ரோமர் 1:8)
…
------------
4.இயேசு வேறு தேவன் வேறு. தேவன் இயேசுவைக்கொண்டு தீர்ப்பு வழங்குவாராம்.
…
¹⁶ "என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்." (ரோமர் 2:16)
-----------
5.தேவன் தான் இயேசுவை பலியாக ஆக்கினாராம். சோ இயேசு வேறு தேவன் வேறு.
²⁶ கிறிஸ்து இயேசுவினுடைய இரத்ததைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.(ரோமர் 3:26)
-------------
6.தேவன் என்பவர் ஒருவரே.
³⁰ "விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே."(ரோமர் 3:30)
அந்த தேவன் இயேசு அல்ல என்பதால், இயேசு தேவனல்ல!
-------------
7.இயேசு என்பவரை மரித்தோரிலிருந்து தேவன் தான் எழுப்பினார். சோ தேவன் வேறு இயேசு வேறு.
…
²⁴ நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.
²⁵ "அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். " (ரோமர் 4:24-25)
------------
8.இயேசு வேறு தேவன் வேறு. இயேசு மூலமாக தேவனிடம் சமாதானத்தை பெற்றிருக்கிறார்களாம்.
¹ "இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்."(ரோமர் 5:1)
--------
9.இயேசு என்பவர் கடவுள் அல்ல..
அவருடைய குமாரனாம்! குமாரன் வேறு தேவன் வேறு.
இந்த இயேசு மூலமாய் தேவனை மேன்மை பாராட்டுகிறார்களாம்.
…
¹⁰ "நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே."
¹¹ "அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்." (ரோமர் 5:10-11)
-----------
10.இயேசு என்பவர் ஒரு மனுசன். தேவனுடைய கிருபை இயேசு என்ற மனுசனின் கிருபையினால் வருகிறதாம்.
…
¹⁵ "ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது." (ரோமர் 5:15)
-----------
.
11.இயுசு வேறு தேவன் வேறு.. பிதாவின் மகிமையினால் இயேசு மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டாராம்.
⁴ "மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்."
(ரோமர் 6:4)
---------.
12.இயேசுவும் பாவமும் எப்படி வேறு வேறானதோ, அதே போல் இயேசுவும் தேவனும் வேறுவேறானவர்கள்.
காரணம் இயேசு பாவத்துக்காக மரணித்தாராம்.
தேவனுக்காக பிழைத்திருக்கிறாராம்.
…
¹⁰ "அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்."
¹¹ "அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்." (ரோமர் 6:10-11)
--------------.
13.இயேசு என்பவர் வேறு தேவன் வேறு.. இயேசு மூலமாக மீண்டும் தேவனை ஸ்தோத்திரிக்கிறாராம்.
²⁵ "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன். " (ரோமர் 7:25)
-------
14.தேவன் வேறு இயேசு வேறு.தேவன் இயேசுவை பாவ மாம்சத்தின் சாயலாக அனுப்பினாராம்.
பாவத்தின் சாயலாக அனுப்பப்பட்டவரும் அனுப்பிய தேவனும் வேறுவேறு.
³ "அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." (ரோமர் 8:3)
---------
15 இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியவர் தான் தேவன்
இயேசு அல்ல."
¹¹ "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." (ரோமர் 8:11)
-------
16.இயேசு வேறு தேவன் வேறு. இயேசுவோடு உடன் சுதந்தரர்களாக பவுலும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்களாம். அதாவது இயேசுவின் பங்காளிகளாக இருக்கிறார்களாம்.
¹⁷ "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்."
.
…
²⁹ "தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்;"
…
³² "தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" (ரோமர் 8:17,29,32)
----------
17.தேவன் வேறு இயேசு வேறு.. தேவனது வலது பக்கத்தில் இயேசு இருந்து கிறிஸ்தவர்களுக்காக வேண்டுதல் செய்கிறாராம்
³⁴ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. (ரோமர் 8:34)
----------
18.இயேசு தான் சர்வத்திற்கும் மேலான தேவனா?
“"பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்."”
— Romans 9:5 (TBSI)
இது தவறான மொழிபெயர்ப்பும் பவுலின் மொத்த கருத்துக்கும் முரணானதும் ஆகும்.
ஏனெனில் பவுலின் கருத்துப்படி , இயேசு என்பவர் தேவனல்ல.. மாறாக ஒரு மனுசன் என்பதே.(ரோமர் 5:15)
⁵ "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே."
⁶ எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. (1 தீமோத்தேயு 2:5-6)
அதாவது ஒரே தேவன் உள்ளார். இயேசு என்பவர் ஒரு மனிதர். அவர் மனிதருக்கும் தேவனுக்குமான மத்தியஸ்தர் (இடைத்தரகர்) என்பதே பவுலின் நம்பிக்கை ஆகும்.
அதனால் இவ்வசனத்தை KJV இவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறது:
“Whose are the fathers, and of whom as concerning the flesh Christ came, who is over all, God blessed for ever. Amen.”
— Romans 9:5 (KJV)
"தேவன் என்றென்றும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்" என்றே பவுல் சொல்கிறார்.
இயேசுவை ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவன் என கூறவில்லை!
இதேபோல் RSV:.
RSV: “to them belong the patriarchs, and of their race, according to the flesh, is the Christ. God who is over all be blessed forever. Amen.”
அதாவது "தேவனே சர்வத்திற்கும் மேலானவர் என்றென்றும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்." இயேசுவை பற்றியது அல்ல!
கிறிஸ்தவர்களை பொருத்தமட்டில் நேரடியாக இயேசு வேறு தேவன் வேறு என இருப்பதையெல்லாம் விட்டுவிட்டு, பல வகையில் அர்த்தம் செய்ய முடியுமான வசனங்களை மட்டும் தமக்கு சார்பாக மொழிபெயர்த்து அதை ஆதாரமாக காட்டுவார்கள்.
இங்கே பவுல், யூதர்களுக்கு தேவன் செய்த நலவுகளை பட்டியல் படுத்தும் போது, அவர்களில் தான் இயேசுவும் வந்தார் என கூறிவிட்டு, தேவன் எப்படிப்பட்டவர் என்று தான் இங்கே சொல்கிறார். இயேசுவை அல்ல!
இந்த புத்தகத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை தேவன் வேறு இயேசு வேறு என்றே சித்தரிக்கப்படும் போது, ஒரு வசனத்தை மாற்றி மொழிபெயர்த்து அடம்பிடிப்பது அறிவீனம்!
மேலும் என்றென்றும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்ற வாசகத்தை பவுல் பிதாவுக்கு தான் தனது எல்லா எழுத்துக்களிலும் எழுதியும் இருக்கிறார்.
.
உதாரணமாக ரோமர் 1:25, 2 கொரிந்தியர் 11:31
அப்படியிருக்க பவுலே யாரை மனுசன் என்றும் தேவன் வேறு அவர் வேறு என்று சொல்கிறாரோ, அந்த நபரை தான் பவுல் கடவுளென சொல்கிறார் என்பது பவுலுடைய கருத்துக்களையே திரிப்பதாகும்!.
-------
19.தேவன் வேறு . இயேசு வேறு. தேவன் தான் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினாராம்!
.
⁹ "என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்." (ரோமர் 10:9)
----------
20.இயேசு வேறு தேவன் வேறு
.
¹⁸ இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப்பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.(ரோமர் 14:18)
-----------
21 . இயேசு வேறு தேவன் வேறு.. இயேசுவின் பிதா தான் தேவனாம்.
⁵ "நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு," (ரோமர் 15:5)
---------
22.இயேசு என்பவர் தேவனுடைய சத்தியத்தின் நிமித்தம் யூதர்களுக்கு ஊழியக்காரனாம்.
⁸ "மேலும், பிதாக்களுக்குப்பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்;"(ரோமர் 15:8)
----------
23.இயேசு என்பவர் ஈசாயின் வேர். சோ தேவன் அல்ல. ஈசாயின் வேர் ஒரு மனிதர்.
¹² "மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான்."(ரோமர் 15:12)
அவர் தேவனுக்கு பயப்படும் ஆவியை உடையவர் (ஏசாயா 11:2-3)
--------
24.தேவன் ஒருவரே ஞானமுள்ளவராம். இயேசு மூலம் அந்த ஞானமுள்ள தேவனுக்கு மகிமை உண்டாவதாக என அவர் எழுதுகிறார்.
.
…
²⁷ தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (ரோமர் 16:27)
-------------
கருத்துகள்
கருத்துரையிடுக