1 கொரிந்தியர் படி இயேசு கடவுள் அல்ல

 1 கொரிந்தியரின்படி இயேசு கடவுள் அல்ல

-----------------------


இந்த புத்தகம் பவுல் எழுதிய ஒரு கடிதம் ஆகும். இது கொரிந்தியா என்ற இடத்தில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதியதாக நம்பப்படுகிறது.


இது கூட இயேசு வேறு தேவன் வேறு என வேறுபிரித்து காட்டுவதாக எழுதப்பட்டுள்ளது



1.இயேசு என்பவர் கர்த்தர்/ஆண்டவர். பிதா தான் தேவன் என்பதே பவுலின் நிலைப்பாடு.




² "கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:"


³ நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (1 கொரிந்தியர் 1:2-3)


-------

2.இயேசு என்பவர் தேவனுடைய மகனாம். இதன்படி தேவன் எனப்படுபவர் வேறு , இயேசு வேறு என கூறுகிறார்



⁹ தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.

(1 கொரிந்தியர் 1:9)


----------


 3.இயேசு வேறு தேவன் வேறு. இயேசு என்பவர் கிறிஸ்தவர்களுக்கு தேவனால் ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானாராம் 



³⁰ "அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,"


³¹ அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். (1 கொரிந்தியர் 1:30-31)


---------


பவுலும் சகலமும் கொரிந்தியர்களுடையதாம். கொரிந்தியர்கள் இயேசுவினுடையவர்களாம். இயேசு தேவனுடையவராம்.


அதாவது கொரிந்தியர் எப்படி இயேசு இல்லையோ, அதே போல் இயேசு தேவன் அல்ல.. தேவன் என்பவர் வேறோரு நபர்.



²² "பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும், ஜீவனாகிலும் மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது;"

²³ நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.

(1 கொரிந்தியர் 3:22-23)


சோ இயேசு தான் தேவன் என்பது மடமையான வாதம் 


-----------------


இயேசு என்பவர் கர்த்தராம்... அந்த கர்த்தரை தேவன் தான் எழுப்பினாராம்! சோ தேவன் எனப்படுபவர் வேறு. இயேசு வேறு.



¹³ "வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்துக்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர்."


¹⁴ "தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார். (1 கொரிந்தியர் 6:13-14)

------------


தேவன் என்பவர் ஒரே நபர் தான். அவர் தான் பிதா. அவரே சகலதையும் படைத்தாராம். ஒரே கர்த்தர் இயேசுவாம். அவர் மூலமாக சகலதும் உண்டானதாம்.

அதாவது இயேசு மூலமாக தேவன் படைத்தார் என்பது பவுலின் நம்பிக்கை!!!

ஆனால் ஒரே தேவன் இயேசு அல்ல.. பிதா என்பதே பவுலின் நம்பிக்கை!!


"

⁴ "விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்."

⁵ "வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,"

⁶ "பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்."

(1 கொரிந்தியர் 8 :4-6)


-----------------

பழைய ஏற்பாட்டு காலத்தில் இயேசுவை தடியால் அடித்து தண்ணீர் வரவைத்தாராம் மோசே (அதாவது மலை வேசத்தில் யேசு தான் இருந்தாராம்.)


இயேசுவிலிருந்து தண்ணீரை குடித்திருந்தும்கூட, தேவன் அவர்களிடம் பிரியப்படவில்லையாம்.


சோ தேவன் வேறு.. மலைவேசம் போட்டு சென்ற இயேசு வேறு என்பதே பவுலின் கற்பனை




³ எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.

⁴ "எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே."


⁵ "அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்."(1 கொரிந்தியர் 10:3-5)


----------------


8.இயேசுவை இஸ்ரேலியர் பரீட்சை பார்த்தார்களா?

 …  

⁹ "அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக."(1 கொரிந்தியர் 10:9)

இது தவறான மொழிபெயர்ப்பாகும்.


அவர்கள் சிலர் பரீட்சை பார்த்து பாம்புகளால் அழிக்கப்பட்டது போல, நாம் கிறிஸ்துவை பரீட்சை பாராதிருப்போமாக என்றே பவுல் கூறுகிறார்


“Neither let us tempt Christ, as some of them also tempted, and were destroyed of serpents.”

  — 1 Corinthians 10:9 (KJV)


பழைய ஏற்பாட்டில் இஸ்ரேலியர் மோசேயையும் தேவனையும் பரீட்சை பார்த்தார்கள். அதற்காக பாம்புகளால் அழிக்கப்பட்டனர். அது போல இயேசுவை பரீட்சை பார்க்க வேண்டாம் என்கிறார் பவுல்.



பவுலின் நம்பிக்கை பிரகாரம் இயேசு என்பவர் வேறொரு நபர், தேவன் என்பவர் வேறோரு நபர். இந்த இயேசு தேவனுக்கு அடிபணிந்தே இன்றும் இருக்கிறார் என்பதே பவுலின் நம்பிக்கை (1 கொரிந்தியர் 14:28)


-------------

அந்தஸ்தில் எப்படி ஆணும் பெண்ணும் வெவ்வேறோ, அந்தஸ்தில் மற்ற ஆணும் இயேசுவும் வெவ்வேறோ, அதேபோன்று இயேசுவும் தேவனும் அந்தஸ்தில் வெவ்வேறானவர்கள் மட்டுமல்ல! அவர்கள் இருவரும் வெவ்வேறு நபர்கள்.


அப்படி இருக்க, இயேசு தேவன் என்பது பவுலின் கருத்துக்கு முரணானவை!




“"ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்."”

  — 1 கொரிந்தியர் 11:3 ()


இயேசுவுக்கு தலைவர் தேவன் தானாம்!


----------------


10.ஆவியானவர் ஒருவர். இயேசு இன்னொருவர். தேவன் வேறொருவர். சோ இயேசு வேறு தேவன் வேறு.



⁴ "வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே."


⁵ "ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே."


⁶ "கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.(1 கொரிந்தியர் 12:4-6)


----------------


11.இயேசு வேறு தேவன் வேறு.. இயேசுவை தேவன் எழுப்பினார்



¹⁵ "மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே."

1 கொரிந்தியர் 15:15


---------

12.ஆதாம் என்பவர் மனிதனோ, அதே போன்று இயேசு என்பவரும் ஒரு மனிதரே.

 …  


²¹ "மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று."


²² "ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்."


²³ "அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்."

1 கொரிந்தியர் 15:21-23


-----------------



தேவன் என்பவரே பிதா. அவர் தான் இயேசுவுக்கு சகலதையும் கீழ்படுத்தி கொடுத்தாராம் 


அவர் கீழ் படுத்தி கொடுத்தார் என்பதிலிருந்து அவர் இயேசுவுக்கு கீழ்ப்படிய வில்லை. மாறாக இயேசு தான் அவருக்கு கீழ்படிந்திருப்பார் என்பதே பவுலின் நம்பிக்கை!


²⁴ "அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்."

²⁵ "எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகை செய்யவேண்டியது."

 …  

²⁷ "சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது."


²⁸ "சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்." (1 கொரிந்தியர் 15:24-25,27-28)


சோ இயேசு வேறு, இயேசு யாருக்கு அடிபணிவாரோ , அந்த தேவன் வேறு!

-----------------



14.இயேசு என்பவர் இரண்டாம் ஆதாம்... இரண்டாம் தேவன் அல்ல! இயேசு என்பவர் இரண்டாம் மனிதன். இரண்டாம் தேவன் அல்ல! என்பதே பவுலின் நம்பிக்கை


⁴⁵ அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.


 …  

⁴⁷ முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.


⁴⁸ "மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே."


⁴⁹ "மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம்." (1 கொரிந்தியர் 15:45,47-49)


-------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்