கொலோசெயர் படி இயேசு கடவுள் அல்ல
கொலோசெயர் படி இயேசு கடவுள் அல்ல
——————-
இது கொலோசே ஊரில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதிய கடிதமாக கருதப்படுகிறது.
.
1.தேவன் வேறு இயேசு வேறு. தேவன் என்பவரே பிதா என்பதே பவுலின் நம்பிக்கை
.
² கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (கொலோசெயர் 1:2)
——–
2.இயேசுவின் பிதாவே தேவன் என்பதே பவுல் கூறும் கருத்து
…
⁵ “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்.” (கொலோசெயன் 1:5)
————–
3 . இயேசு என்பவர் தேவனால் பெறப்பட்ட மகன்.. தத்தெடுக்கப்பட்ட மகன் அல்ல என்றும், அவர் சகல படைப்புகளுக்கு முன்பும் இருந்ததாகவும், அவரைக் கொண்டே தேவன் சகலத்தையும் படைத்தார் என்பதும் பவுலின் நம்பிக்கை .
அதாவது அந்த ஒரே தேவன் இயேசு அல்ல.. அவரது பையனே அவர் என்பதே பவுலின் நம்பிக்கை
…
¹⁵ “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்.”
¹⁶ “ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.”
¹⁷ “அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.”
¹⁸ “அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.” (கொலோசெயர் 1:15-18)
அப்படி இருந்தும் இயேசுவுக்கும் அந்த பிதாவே தேவன் (எபேசியர் 1:17)
—————-
4.தேவன் வேறு இயேசு வேறு என்பதே பவுலின் நம்பிக்கை.. பிதாவே தேவனாம்
.² “அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.” (கொலோசெயர் 2:2)
———–
5.இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியவரே தேவன் என்கிறார் பவுல்
¹² “ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.”
(கொலோசெயர் 2:12)
————-
6.இயேசு தேவனது வலது பக்கத்தில் இருக்கிறாராம். இதன்மூலம் இயேசு வேறு தேவன் வேறு என தெளிவு
¹ “நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.” (கொலோசெயர் 3:1)
———————–
7.இயேசுவின் நாமத்தினால் தேவனை ஸ்தோத்திரிக்குமாறு பவுல் கூறுகிறார்.. இதன்படி இயேசு வேறு தேவன் வேறு என்பதே பவுலின் நம்பிக்கை ஆகும்
…
¹⁷ “வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.”“” (கொலோசெயர் 3:17)
————–
கருத்துகள்
கருத்துரையிடுக